Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் கனமழை எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

01:56 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அறிவுரைகளை பின்பற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக  ஜன.07-ம் தேதி முதல் தென் மாவட்டங்கள் மற்றும் வடதமிழக  கடலோர மாவட்டங்களில்  அநேக இடங்களிலும், வடதமிழக உள்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஒன்றை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. எனவே தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.

பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  அந்தந்த பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல்துறையால் வழங்கப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Heavy rainIMOMeteorological Departmentnews7 tamilNews7 Tamil UpdatesrainfallTirunelveliWeather Update
Advertisement
Next Article