கனமழை எச்சரிக்கை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை இன்று பிற்பகலுக்குள் விலகக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளம், மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.16) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.