நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை...4-வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 4வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதனை, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி, தேவாலா, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைத்தோட்டக் காய்கறிகள் நீரில் மூழ்கியுள்ளன. பிதா்க்காடு பகுதியிலிருந்து பாட்டவயல் செல்லும் சாலையிலும், கூடலூா் - கோழிக்கோடு சாலையில் நாடுகாணி பகுதியிலும், அய்யன்கொல்லி சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தன.
தொடர்ந்து இன்றும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை 4வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் தொடர்ந்து இன்றும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.