Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாகப்பட்டினத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை!

09:23 AM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் இரவில் மட்டும் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : #Puducherry | காலையிலேயே ஷாக்… 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்!

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்குவளையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருக்குவளையில்,  தலைஞாயிறு,  திருப்பூண்டி, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. நாகப்பட்டினம், மாவட்டத்தில் அதிகபட்சமாகத் திருக்குவளையில் மட்டும் 40 மில்லிமீட்டர் மழையும், தலைஞாயிறு பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாகச் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
Havy RainNagapattinamNews7Tamilnews7TamilUpdatesRainAlert
Advertisement
Next Article