கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கும் கனமழை -தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
09:15 AM Nov 10, 2023 IST
|
Web Editor
Advertisement
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிவரும் மழை காரணமாக, தாமிரபரணிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிவரும் மழை காரணமாக, தாமிரபரணிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், சில வாரங்களாகத் தொடர் மழை பெய்துவரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஒன்று, சிற்றாறு இரண்டு ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து எந்நேரத்திலும் உபரி நீர் திறந்துவிடப்படலாம் என்பதால், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.
Next Article