Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இத்தாலியில் கனமழை - வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பாதிப்பு!

இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
12:35 PM Mar 16, 2025 IST | Web Editor
இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
Advertisement

ஐரோப்பிய நாடான இத்தாலியில் உருவான புதிய புயலால் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி டஸ்கனி, எமிலியா ஆகிய பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.

Advertisement

இதனை காரணமாக ஆர்னோ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மேலும் சாலையில் சென்ற கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் போலோக்னா நகரில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

முன்னதாக வெள்ள அபாயம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி அங்கிருந்த மக்கள் வீட்டை காலி செய்து நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர்.

அதேபோல் புளோரன்ஸ், பிசா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. டஸ்கனி பிராந்தியத்தில் 60க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
#affectedFloodingHeavy rainItalylandslidesPeopleRedAlert
Advertisement
Next Article