சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை! “இன்று (அக்.15) காலை முதல் இரவு வரை மட்டும் 5 இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது”
சென்னையில் இன்று (அக்.15) ஒரே நாளில் 5 இடங்களில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கன மழை தொடர்ந்து பெய்யுமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில், சென்னையில் இன்று (அக்.15) ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று(அக்.15) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு:
மணலி 230.1 மி.மீ
கத்திவாக்கம் 212.4 மி.மீ
பெரம்பூர் 211.8 மி.மீ
கொளத்தூர் 211.2 மி.மீ
அயப்பாக்கம் 210.0 மி.மீ
இதுமட்டுமல்லாது, சென்னையில் 29 இடங்களில் 100 மி.மீட்டருக்கு மேல் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மழைநீரை அகற்றுவது, தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.