Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனமழை எதிரொலி | மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய #Velacherry மேம்பாலம்!

08:42 AM Nov 30, 2024 IST | Web Editor
Advertisement

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர்.

Advertisement

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர். வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மழை பெய்த போது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் முன்னெச்சரிகையை நடவடிக்கையை மக்கள் எடுத்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதத்திலும் கனமழை எச்சரிக்கையால் வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தின் மீது கார்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags :
Heavy rainRainrain alertTn RainsWeatherWeather Update
Advertisement
Next Article