"என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நன்றி -விஜய்...!
தன் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்களையும் தெரிவிப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்றபெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக கடந்த வெள்ளியன்று(பிப்.2) அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திர்கு ஆதரவாக திரைத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் பிற விஐபிக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் தெரிவித்திருய்ப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. திரைத்துறை நன்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர ச்கோதரிகள் ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி “ என் அநடிகர் விஜய் தெரிவிட்ர்ஹ்துள்ளார்.