Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது!” - ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் #MKStalin நெகிழ்ச்சி பதிவு!

08:00 AM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

“கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளநிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். சுற்றுலா செல்ல உள்ள ஆசிரியர்களை, அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது தொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த பதிவைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து, கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு!

https://twitter.com/mkstalin/status/1848036467953881375?s=08

இந்தப் பதிவு குறித்து நான் அமைச்சர் அன்பில் மகேஸிடம் பேசியபோது, “இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும், இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது! இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஸுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Anbil MaheshCHIEF MINISTEREducation TourMK StalinSchool Education MinisterTeachers
Advertisement
Next Article