Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பிரதிபலன் பார்க்காமல் உதவுபவன் இறைவனுக்கு சமமானவன்" - மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

12:25 PM Feb 27, 2024 IST | Web Editor
Advertisement

"சக மனிதனுக்கு எந்த பிரதிபலிப்பலனும் பார்க்காமல் உதவுபவனே  இறைவனுக்கு சமமானவன்" என மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர் தெரிவித்ததாவது..

” மிக்ஜாம் புயல், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்று மட்டும் 12 கோடியே 88 லட்ச ரூபாய்க்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.  எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, யார் ஒருவன் சக மனிதனுக்கு எந்த பிரதிபலிப்பலனும் பார்க்காமல் உதவுகிறானோ அவன் தான் இறைவனுக்கு சமமானவன்.

இந்தியாவிலேயே ஊட்டச்சத்து நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது அதற்கு காரணம் நம்முடைய மீனவர்கள் தான். ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். அந்த மாணவர்கள் மீது அப்போதைய அரசு வன்முறை மற்றும் வழக்கை பிரயோகித்தது. அப்போது மாணவர்களை காக்க இந்த மீனவர்கள் போராடினார்கள்.

மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது  திமுக ஆட்சியில்தான். மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரண நிதியை  வழங்கவில்லை.  மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் 450 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்கள் அனைவரும் தமிழக அரசின் தூதுவர்களாக செயல்பட்டு தமிழக அரசின் சாதனைகளை வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும். “ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Cyclone MichaungDMKflood reliefMichaungminister udhayanidhi stalin
Advertisement
Next Article