Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முஹமது ஷமி! - அடுத்தடுத்து சாதனைகளை படைத்து அபாரம்!

09:56 AM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில்  முகமது சமி அடுத்தடுத்து சாதனை, அரையிறுதி போட்டியில்  7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Advertisement

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. 

அதனை தொடர்ந்து, உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது.  இந்த உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் அடுத்தடுத்து சாதனைகளை படைத்துள்ளார் முகமது சமி.

இதையும் படியுங்கள்:உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? | தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை…

பந்துவீச்சை பொறுத்தவரை,  இந்திய வீரர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  நடப்பு உலகக் கோப்பை தொடரில் இது அவரது 3 ஆவது 5 விக்கெட் ஹாவுல் ஆகும்.

மேலும், ஒரு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஷமி.

இதன்மூலம்,  இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. 4 -வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றுள்ளது.

Tags :
7 WicketsCWC2023CWC23India vs NewZealandIndia WonMan of the TournamentMohammed Shamisemi finalShamisuccessive achievementsTeam IndiaThe Godthe legendthe muthWorld Cup 2023
Advertisement
Next Article