‘சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகாது’ - 9 வயது சிறுமி வழக்கில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஒருவரின் இறந்த உடலுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கரில் கடந்த 2018ஆம் ஆண்டு 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி இறந்த பிறகும், அவரது உடலுடன் உடலுறவு கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கில் நீலு நாகேஷ், நிதின் யாதவ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிதின் யாதவ்க்கு ஆயுள் தண்டனையும், நாகேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இருவர் மீதும் போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போக்சோ வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீல்காந்த்தை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா மற்றும் பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பையும் கேட்ட நீதிபதிகள், “பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமே இது போன்ற விதிகள் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்தது என்பது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது பாலியல் வன்கொடுமையாகாது.
IPCயின் 363, 376 (3), POCSO சட்டம் 2012 இன் பிரிவு 6 மற்றும் பிரிவு 3(2)(பிரிவு 6) ஆகியவற்றின் கீழ் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்பட முடியாது” என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அரசு தரப்பு,
“IPCயின் 376வது பிரிவு சடலத்துடன் உடலுறவு கொள்வது “பாலியல் வன்கொடுமை” என்று வகைப்படுத்தவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 21வது பிரிவு கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை கொண்டுள்ளது. இது இறந்த குழந்தையின் உடலை நடத்துவதற்கும் பொருந்தும்” என வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், அதற்கான தண்டனைகளை உறுதி செய்ததாகவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.