சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி!
வேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் ஹசன் அலி 6-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
உலகக் கோப்பை லீக் போட்டியின் 35-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதுகின்றன. கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 401 ரன்களை குவித்துள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில் 108 ரன்களையும், கேன் வில்லியம்ஸ் 79 பந்துகளில் 95 ரன்களையும் விளாசி அதிரடி காட்டினர் பாகிஸ்தான் அணிக்கு 402 என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹசன் அலி 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 13 விக்கெட்டுகளை எடுத்து அந்தத் தொடரிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலர் ஆனார் ஹசன் அலி. 66 போட்டிகளில் 38 இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்த ஹசன் அலி இந்த உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமாக இருந்தது.