”நடிகர் விஜய் இவ்வளவு நாள் தூங்கிக்கொண்டு இருந்தாரா?”- தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,
”நான் 2019-ம் ஆண்டு நான் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் நின்றபோது
தூத்துக்குடி-க்கு இப்படி பல திட்டங்கள் வர இருக்கின்றது என்று அன்றே
சொன்னபோது சிரித்தார்கள். இப்போது நான் சொன்னது எல்லாம் நடந்து வருகின்றது. தமிழகத்தில் பல திட்டங்கள் வருவதற்கு மத்திய அரசு காரணம் என்பதே தமிழக அரசு ஒத்துகொள்ள வேண்டும்.ராகுல் காந்தி தவறு செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தினால் கூட ராகுல் காந்தி குட்டு வாங்கி உள்ளார்.
முதல்வர் மகிழ்ச்சி இன்னும் ஆறு மாத காலம்தான். அவர் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். தமிழகம் முழுவதும் திமுக தோற்கபோவது உறுதி. மக்களிடம் கேளுங்கள் உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா என்று. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திமுக அரசு பார்ப்பதில்லை. அவர்களுக்கு மொழிப்பிரச்சனை இவைகளை தூக்கி சுமப்பதே வேலை.
நாட்டில் பல பிரச்னைகள் ஓடிகொண்டு இருக்கும்போது தம்பி விஜய் ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தம்பி விஜய் இவ்வளவு நாள் தூங்கிகொண்டு இருந்தாரா? ஆணவ கொலைகள் நடக்கும்போது தம்பி விஜய் எங்கே போனார்.
தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்ற ஆணவ கொலை மனதை உறுக்கியது. இதுபோன்ற சம்பவங்களில் திருமாவளவன் போன்றவர்கள் கடந்த ஆட்சியில் இருந்தபோது கொலைகள் நடப்பதாக ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினர் ஆனால் சமீபத்தில் நடந்த ஆணவ கொலைக்கு இதுவரை திருமாவளவன் இதுவரை ஒரு போராட்டமோ ஆர்பாட்டமோ நடத்தவில்லை.
இதுவரை வெளிநாட்டுக்கு சென்ற முதல்வர் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார் என்ற அறிக்கையை வெளியிட்டுவிட்டு அடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்று மற்ற திட்டங்களை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யட்டும்" தெரிவித்துள்ளார்.