"இனி மெழுகுவர்த்திக்கு மாற வேண்டியதுதான்.. " - ரூ.45,000 மின்கட்டணம் செலுத்திய நபரின் பதிவு இணையத்தில் வைரல்!
இரண்டு மாத மின்கட்டணமாக ரூ.45,000 செலுத்தியதாக குருகிராம் பகுதியை சேர்ந்த ஜஸவீர் சிங் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக குளிர்சாதன பெட்டிகள், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகளவில் செலவாகிறது. இதனால், மாதம் தோறும் மின்கட்டணம் அதிகரிக்கிறது. இந்நிலையில், குருகிராம் பகுதியில் ஒரு நபர் ரூ.45,000 மின்கட்டணம் செலுத்தியுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் குர்கான் மாவட்டத்தில் உள்ள குருகிராம் பகுதியில் ஜஸவீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். அந்த நபர் ஹூட் செயலியின் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதத்தில் மொத்தமாக ரூ. 45,000 மின் கட்டணம் செலுத்தியதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தான் செலுத்திய இரண்டு மாத மின்கட்டணத்தின் ஸ்கிரீண்ஷாட்டை அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : கார்குடி வனப்பகுதி அருகே கால்வாயில் விழுந்த குட்டி யானை – பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
மேலும், ஜஸவீர் சிங் அந்த பதிவின் கீழ் "அதிக மின்கட்டணம் உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறிவிடலாம் என்று நினைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஜஸ்வீர் சிங் என்பவரின் பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.