Haryana & JK சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம் - #ElectionCommission அறிவிப்பு!
அக்.1ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்.5ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை அக்டோபர் 5-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும் அக்.1 ஆம் தேதி நடைபெறும் ஜம்மு-காஷ்மீர் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
அதுபோல ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை அக்.8ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்.4 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 8ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.