Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெப் சீரிஸாக உருவாகும் ஹாரி பாட்டர்... நடிக்கவுள்ள 3 சிறுவர்கள் அறிமுகம்!

ஹாரி பாட்டர் வெப் சீரிஸில் நடிக்கவுள்ள 3 சிறுவர்களை தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
06:09 PM May 28, 2025 IST | Web Editor
ஹாரி பாட்டர் வெப் சீரிஸில் நடிக்கவுள்ள 3 சிறுவர்களை தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Advertisement

90 கிட்ஸ்கள், 2000 தொடக்கத்தில் பிறந்தவரகள் கொண்டாடி ரசித்த படம் தான் ஹாரி பாட்டர். மாயா ஜால உலகில் நடக்கும் சாகசங்கள், பறக்கும் புத்தகங்கள், அமானுஷ்யங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகளை ரசிக்க வைத்து என்றென்றும் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது. ஆங்கிலத்தில் ஜே.கே. ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 8 பாகங்களாக உலகளவில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்போட்ட படமாக ஹாரி பாட்டர் இருந்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : ‘ரெட்ரோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றம்!

டேனியல் ரேட்க்ளிஃப் , ரூபர்ட் க்ரிண்ட் , எம்மா வாட்சன் என இப்படத்தில் நடித்த நடிகர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உருவானார்கள். அந்த வகையில், ஹாரி பாட்டர் கதை வெப் சீரிஸாக உருவாக உள்ளது. எச்பிஓ தளம் (HBO) தயாரிக்க உள்ள இந்த சீரிஸிற்கான படப்பிடிப்பு அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 7 சீசன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படும் சூழலில் அடுத்த ஆண்டு முதல் சீசன் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், 'ஹாரி பாட்டர்' வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள 3 சிறுவர்களை தயாரிப்பு நிறுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஹாரிபாட்டராக டாமினிக் மெக்லக்லின், ஹெர்மாயினியாக அரபெல்லா ஸ்டேண்டன் மற்றும் ரான் வீஸ்லியாக அலஸ்டர் ஸ்டவுட் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Harry Pottermovienews7 tamilNews7 Tamil UpdatesNovelWeb Series
Advertisement
Next Article