Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#LubberPandhu | ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

08:27 AM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ திரைப்படம் வருகிற 31ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளதை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : TNRains | எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – விவரம் இதோ!

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற 31ம் தேதி ஹாட் ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/SimplySouthApp/status/1848370479507054977?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1848370479507054977|twgr^65cfad38e8854ffce95458decbb41e184965cb97|twcon^s1_&ref_url=https://www.dailythanthi.com/cinema/ott/lubber-pandhu-ott-released-date-announced-1127086
Tags :
CinemaUpdateGethuDineshHarishKalyanLubberPandhumovieNews7Tamilnews7TamilUpdatesott
Advertisement
Next Article