Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா செய்த செயல் - ரசிகர்கள் கடும் அதிருப்தி!

11:24 AM Mar 25, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த செயல் ரசிகர்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024 : பெங்களூர் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்!

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாம் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ்  வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா ஆகியோர் களம் இறங்கினர். இதையடுத்து, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து,  169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். கிஷன் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் 43 ரன்களும், நமன் 20 ரன்களும், ப்ரவிஸ் 46 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.  ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. ஆரம்பத்தில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது ரோஹித் சர்மா மும்பை அணியில் தொடர்வாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என விவாதிக்கப்பட்டது.


ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பந்து வீசச் சென்ற அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவை பவுண்ட்ரி லைன்களில் ஃபீல்டராக நிற்கச் சொல்லி சைகையால் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ரோஹித்தும் பவுண்ட்ரி லைன்களில் போய் தனது ஃபீல்டிங்கை தொடர்ந்தார்.

இந்த செயல் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் ஹர்திக் பாண்டியாவின் செயலுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ரோஹித் சர்மா பொதுவாகவே 30 யார்ட்ஸ் தொலைவில் தான் ஃபீல்டிங் செய்வார். பவுண்ட்ரி லைன்களில் அவர் நின்று பார்த்ததில்லை என் கருத்து தெரிவித்துள்ளனர்,

Tags :
gujarath giantsHardik PandyaHardik Pandya'sIPLIPL2024Mumbai IndiansRohit sharma
Advertisement
Next Article