ஆஞ்சநேயர் பிறந்தநாளான இன்று மக்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து வெள்ளி கவசம் பொருத்தி வட மாலை அணிவித்தனர்
Advertisement
அனுமன் ஜெயந்தி, மார்கழி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது.மகாவீரர் ஆஞ்சநேயர் பிறந்தநாளான இன்று(டிச-30) மக்கள் அனைவரும் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஈரோடு மாவட்டம் வ.உ.சி பூங்காவில் உள்ள மகாவீரர் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் பொருத்தி வட மாலை அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டும், துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.