குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
08:12 PM Sep 18, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது சமீபத்தில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், வணிக வரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2ஏ-க்கான முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மொத்தமாக 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வானது வருகிற செப்டம்பர் 28ஆம் நாள் நடைபெற உள்ளது.
Advertisement
இந்த நிலையில் இந்த குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
www.tnpsc.gov.in , www.tnpscexams.in இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
Next Article