சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை குறிவைத்த ஹேக்கர்கள்..!
சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக அவர்கள் பயன்படுத்தும் ஆப்பிள் போன் நிறுவனம் குருஞ்செய்தி அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் சில குறிவைத்துள்ளனர். எதிர் கட்சிதலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என இந்தியாவில் 6 நபர்களின் ஐ - ஃபோனை மற்றும் மின்னஞ்சல்களை ஹேக் முயற்சி செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
அந்த குருஞ்செய்தியில் அரசின் உதவியோடு செயல்படும் ஹேக்கர்கள் சிலர் தங்களது மொபைல் போனை ஹேக் செய்ய முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொபைல் போன்களை ஹெக் செய்ய முயற்சித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ ( NSO Group) நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus spyware) உதவியுடன் உலகில் பல்வேறு செய்தி நிறுவனங்களில் பணி புரியும் 30-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உளவு பார்க்கப்பட்டதை சிட்டிசன் ஆய்வக (Citizen Lab) இணைய பாதுகாப்பு ஆய்வுகளை ஏற்கனவே வெளியிட்டது.