எச்1பி விசா விவகாரம் - பிரதமரை விமர்சித்து ராகுல் பதிவு!
அமெரிக்க அதிபராக 2 அவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக தற்போது அவர் அமெரிக்கவில் குடியுரிமை பெறாமல் அங்குள்ள பெரும் நிறுவனங்களில் பணிப்புரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அதன் படி, இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 88 லட்சம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளார்.
இந்த எச்1பி விசாவின் மூலம் அமெரிக்காவில் அதிகப்படியான இந்தியர்கள் பணிப்புரிவதாக தெரிகிறது. ஆகவே கட்டண உயர்வால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி 2017 இல் தான் பதிவிட்ட டுவீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார். அதில் "மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக உள்ளார்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.