குட்கா முறைகேடு வழக்கு - முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி ரமணா,
முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள்
விற்கபடுவதாக புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாதவ ராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை
அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன்,
சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த
சிபிஐ, இவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்தது.
இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றபத்திரிகையில் சேஷாத்ரி,
குல்சார் பேகம், அனீஷ் உபாத்யாய் வி.ராமநாதன் ஜோஸ் தாமஸ், செந்தில் வேலவன்,
முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா , சி.விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், கார்த்திகேயன் வி.சம்பத், ஏ.மனோகர்,
அ.பழனி கே.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் என 21
பேருக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகை கடந்த மே மாதம் தாக்கல் செய்தது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 5 பேர் ஆஜராகி இருந்தனர்.
இதனையடுத்து நீதிபதி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டு புதிதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கபட்டுள்ளது. இந்நிலையில், குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் மற்றும் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உட்பட செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.