Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துப்பாக்கி கலாச்சாரத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் ; முடிவுக்கு கொண்டுவர புதிய சட்டம் - #JoeBiden அறிவிப்பு!

08:39 AM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

துப்பாக்கி கலாச்சாரத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகளை முடிவுக்கு கொண்டுவர புதிய சட்டம் கொண்டுவரப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

Advertisement

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு தேசமாக, துப்பாக்கி வன்முறையை நாம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : உள்நாட்டில் உருவாக்கப்பட்ட #Paramrudra சூப்பர் கம்ப்யூட்டர்கள் | நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தில் இன்று கையெழுத்திடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்னை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும். அமெரிக்கா துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Americagun violenceJoeBidenNews7Tamilnews7TamilUpdatesPresident
Advertisement
Next Article