Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பஞ்சாப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் டைட்டன்ஸ்!

06:45 AM Apr 22, 2024 IST | Web Editor
Advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. கில், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினர்.

Advertisement

ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப். 21) சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 37 லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து அருமையான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 52 ரன்கள் வரை இவர்கள் ஜோடி அமைத்தனர்.

இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங்  விக்கெட்டை பறிகொடித்தார். பின்னர் ரிலீ ரோசோவ் களம் இறங்கினார். 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அப்போது களத்திற்கு வந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடியாக விளையாடினார்கள்.

அப்போது ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிது. 

கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாஹா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சாஹா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் களத்துக்கு வந்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். அவரை லிவிங்ஸ்டன் வெளியேற்றினார். தொடர்ந்து மில்லர், சாய் சுதர்ஷன், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்ஷன் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் இணைந்து பொறுப்புடன் ஆடினர். ஹர்ஷல் படேல் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்களை கைபற்றினார். ஷாருக் மற்றும் ரஷித் கானை அவர் அவுட் செய்தார்.

19.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத். தெவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணிக்காக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்கள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்கள், அர்ஷ்தீப் மற்றும் சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சாய் கிஷோர் வென்றார்.

Tags :
GT v PBKSGT vs PBKSGujarat TitansIndian Premier LeagueIPL 2024News7Tamilnews7TamilUpdatesPBKS v GTPBKS vs GTPunjab KingsSam CurranShubman Gill
Advertisement
Next Article