Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது" - போக்குவரத்துத்துறை அதிரடி!

12:10 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

காவலர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்தில் பயணிக்க முடியாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து
ஒன்று சென்றது.  அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்ற போது,  அங்கு நின்ற ஒரு காவலர் பேருந்தில் ஏறி உள்ளார்.  இதனை அடுத்து நடத்துநர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது காவலர் அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது.  நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து நடத்துநர் அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும் இல்லாதபட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து. அவர் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள் போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசமாக அனுமதிக்கிறீர்கள்,  நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்த டிஎஸ்பி அலுவலகம் அருகே நடத்துநர் பேருந்து நிறுத்தி அங்கிருந்த காவலரை அழைத்து விவரத்தை கூறியபோது வாரண்ட் வாங்க வேண்டும் இல்லையென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று அந்த காவலரும் தெரிவித்தார்.  இந்த பிரச்னையின் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக பேருந்து தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.  இது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையும் படியுங்கள் : பிரதமர் மோடியின் சகோதரரின் மனைவி சமீபத்தில் இறந்துவிட்டாரா? நடந்தது என்ன?

இந்நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "அரசு பேருந்தில் காவல்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது.  உரிய வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.  பயணச்சீட்டு எடுக்க மறுத்தால் காவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Department of TransportnoticeTamilNaduTNPoliceTransport
Advertisement
Next Article