GTvsSRH | டாஸ் வென்ற ஹைதராபாத் - குஜராத் அணி பேட்டிங்!
நடப்பாண்டிற்கான ஐபிஎல் லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை இன்று(மே.02) எதிர்கொள்ளவுள்ளது. குஜராத் அணி, இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்று 6-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
அதே போல் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் பங்கேற்று 3-ல் மட்டுமே வெற்றி கண்டு 9வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் ஹைதராபாத் தோல்வியை தழுவினால், நடப்பு ஐபிஎல்-லின் அரையிறுதிக்கான ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் நிலை ஏற்படும். இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி தற்போது பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
குஜராத் பிளேயிங் லெவன்:
சுப்மான் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாத்தியா, ரஷீத் கான், முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்ஸி, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா.
ஹைதராபாத் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷான் அன்சாரி, முகமது ஷமி.