Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி! வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!

08:24 PM Nov 11, 2023 IST | Web Editor
Advertisement

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தவுஹித் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார்.

307 ரன் என்ற வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 307 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா இத்தொடரில் 7 வது வெற்றியை ருசித்தது.

ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் மார்ஷ் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 177 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

Tags :
AustraliaAUSvsBANBangladeshICC Cricket World CupICC World Cupnews7 tamilNews7 Tamil UpdatesWorld Cup 2023
Advertisement
Next Article