Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த லால் பகதூர் சாஸ்திரியின் பேரன்....

05:19 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி இன்று  (பிப்ரவரி 14) காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.  தற்போது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவர் தனது ராஜிநாமாவை சமூக ஊடக தளமான X இல் ட்வீட் மூலம் அறிவித்தார்.

உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர்,  “எனக்காக பாஜகவின் கதவுகளைத் திறந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி,  நட்டா,  அமித் ஷா,  முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எனது தாத்தா லால் பகதூர் சாஸ்திரியின் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று உணர்கிறேன்.  கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி செயல்படுவேன்” என்றார்.

மேலும்,  ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம்,  பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நான் நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்று உணர்கிறேன்.  “இந்தியக் கூட்டணிக்கு சித்தாந்தம் இல்லை, மாறாக மோடியை அகற்றுவதே அதன் நோக்கம்.  காங்கிரஸின் சித்தாந்தம் என்ன என்பதை ராகுல் காந்தி  சொல்ல வேண்டும் என்று விபாகர் சாஸ்திரி கேள்வி எழுப்பினார்.

Advertisement
Next Article