Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கிராண்ட் செஸ் டூர் தொடர்: 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்!

12:23 PM Jun 08, 2024 IST | Web Editor
Advertisement

நார்வே செஸ் தொடரின் கடைசி சுற்றில் வெற்றிப் பெற்ற மேக்னஸ் கார்ல்சன் ஆறாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 

Advertisement

நார்வேயில் நடைபெற்ற சர்வதேச செஸ் தொடரில் ஐந்து முறை உலக சாம்பியன் வென்ற மேக்னஸ் கார்ல்சன் (நார்வே),  நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர்.

10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், ஆடவர் பிரிவில் மேக்னஸ் கார்ல்சென் 17.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் மோதிய கார்ல்சென் கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானுக்கு சென்றது.

அதில் வென்ற கார்ல்சென் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை 6ஆவது முறையாகக் கைப்பற்றினார். கார்ல்சென் 17.5 புள்ளிகளுடன் முதலிடம் நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2ஆவது இடமும் இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு முதன்முறையாக நார்வே செஸ் கிளாசிக்கல் கேமில் பட்டம் வென்ற கார்ல்சென் தொடர்ந்து 2019, 2020, 2021, 2022, 2024இல் பட்டம் வென்றுள்ளார். இடைப்பட்ட 2023ஆம் ஆண்டில் மட்டும் ஹிகரு நகமுரா பட்டத்தை வென்றார்.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

Tags :
ChessJu WenjunMagnus CarlsenNorway Chess 2024
Advertisement
Next Article