Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பட்டதாரி ஆசிரியர் தேர்வு | விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!...

09:52 AM Dec 07, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜம் புயல் மழையின் காரணமாக இந்த பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 7-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் (Graduate Teachers/Block Resource Teacher Educators) 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த  25ம் தேதி அன்று வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் மிக்ஜம் புயல் தாக்கம் மற்றும் உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் டிச. 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Next Article