Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு பள்ளியில் சொற்பொழிவு சர்ச்சை: தமிழ்நாட்டில் இனி இது போல் நடக்காது - #TNMinister அன்பில் மகேஸ் பேட்டி!

10:41 AM Sep 06, 2024 IST | Web Editor
Advertisement

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழ்நாட்டில் இனி இதுபோல் எந்த பள்ளிகளிலும் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார். அப்போது இப்படி மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். அதற்கு அந்த சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்ப்டுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. யாருடைய அனுமதியில் இது போன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள் என ஆசிரியர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை அந்த பள்ளியின் முன் கூடி மூடநம்பிக்கையை வளர்க்கும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விசாரணை நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். தமிழ்நாட்டில் இனி இதுபோல் எந்த பள்ளிகளிலும் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வோம்.

உலகத்தில் புனிதமான இரண்டு அறைகள் ஒன்று உண்டு. அவற்றில் ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று பள்ளி வகுப்பறை. பெற்றோர், ஆசிரியர் என இருவரிடமும் நல்ல பிள்ளைகளாக பெயர் எடுக்க வேண்டும் , இது ஒட்டுமொத்தமாக நல்ல பிள்ளையாக உருவாகிறார்கள் என்று அர்த்தம். ஏகலைவன் தொலைவில் இருந்து தனது குருவிடம் பாடம் கற்றார். அதற்கு குரு அவரின் கட்டை விரலை குருதட்சனையாக கேட்டார்.

கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று சொன்னவர் பெரியார், பெண்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்று சொன்னவர் பெரியார். நாம் நம் அறிவை சமூகத்திற்கு எப்படி பயன்படுத்த போகிறோம். விற்பனை பொருளாக சமூகம் நல்லதையும் வைத்திருக்கும் கெட்டதையும் வைத்திருக்கும், எதை ஏற்க வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அதற்கு கல்விதான் உதவும்.

எல்லாரும் படித்தவர்கள் தான் பட்டதாரிகள் தான் பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியருக்கு அறிவு கண்ணாக கல்வி இருந்ததால் தான் மேடையில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார், அதனால்தான் அவர் இன்று என்னோடு ஒன்றாக மேடையில் உள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதற்காக அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அல்ல, உங்களுக்கான பகுத்தறிவு மூலம் இது சரிதானா என்று முழுமையாக அறிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தான் பெரியாரும் சொன்னார். பகுத்தறிந்து பார்த்து முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். யார் பள்ளிக்கு வந்து எந்த கருத்தை தெரிவித்தாலும் கேள்வி கேட்க வேண்டும். அதை விடுத்து உணர்ச்சி மிகுதியோடு இருக்க கூடாது

இந்தப் பள்ளிக்குள் மாணவர்கள் வந்து விட்டால் அவர்கள் நம் பொறுப்பு. இங்கு யார் வர வேண்டும் யார் வரக் கூடாது என்பதை ஆசிரியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தவறுகள் யார் செய்தாலும் பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து தப்பிக்க முடியாது. அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமல்ல நல்லது கெட்டது எது என்று புரிந்து செயல்படுவது தான் அறிவு.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாநில பாடத்திட்டம் குறித்து விமர்சனம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மகாவிஷ்ணு மீது பள்ளி கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

மேலும், மேடவாக்கம் பகுதியில் மாணவர்கள் ஆசிரியர்கள் கால்களை கழுவுவது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்பான கேள்வி, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கால்களை கழுவுவது போன்ற நிகழ்ச்சி எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்றே தெரியவில்லை அதற்கு விளக்கம் கேட்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Advertisement
Next Article