Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... ரூ.10 ஆயிரம் பரிசா?

07:13 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் 13 பேரை தேர்வு செய்து காசோலை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜூன்-2024 மாதத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி மூலம் பயண முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் 13 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் ஜனவரி-2024 முதல் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில், ஜூன்-2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- மும், இதர பத்து பயணிகளுக்கு தலா ரூ.2,000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைபடுத்தும் வகையில், ஜூன் 2024 மாதத்திற்கான பதிமூன்று (13) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில், மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் (மு.கூ.பொ) டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (01.07.2024) தேர்வு செய்தார், அதன் விவரங்கள் கீழ்வருமாறு:

ஜூன்-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, 13 பயணிகளுக்கு பரிசுகள் விரைவில் வழங்கப்படும்"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
News7Tamilnews7TamilUpdatespriceSETCTN BusesTN GovtTNSTC
Advertisement
Next Article