ஆளுநர் தேநீர் விருந்து | தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!
ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தினத்திற்கான (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.
இதையும் படியுங்கள் : மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த விவகாரம் – தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!
ஆளுநர் மாளிகையில் மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்தாண்டு, குடியரசு தின விழா தேநீர் விருந்தில், முதல்வர் பங்கேற்காவிட்டாலும் அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.