Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் காவி உடையில் "திருவள்ளுவர்" ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாழ்த்தால் சர்ச்சை!

10:25 AM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையுடன் உள்ள வள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Advertisement

ஒவ்வொரு வருடமும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையுடன் உள்ள வள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில்,      “திருவள்ளுவர் தினத்தில்,  ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது.  இந்த புனிதமான நாளில்,  அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என ஆளுநர் ரவி திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article