Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை பணியமர்த்த நெல்லை அரசு போக்குவரத்து கழகம் முடிவு - போக்குவரத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி!

11:52 AM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களை பணியமர்த்தி பேருந்துகளை இயக்க நெல்லை அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதனால், போக்குவரத்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டென்டர்கள் வரவேற்கப்படுவதாக தெரிகிறது.

இந்த டெண்டர்களை நேற்று (ஜூன் 17) காலை 11 மணி முதல் ஒப்பந்த புள்ளி திருநெல்வேலி, தூத்துக்குடி ரோடு, வி.எம்.சத்திரம் போக்குவரத்து துறை அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் இந்த ஒப்பந்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 18-ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த புள்ளிகள் ஜூலை 18-ம் தேதி காலை 11 மணிக்கு திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மைய அலுவலகத்தில் வைத்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களை தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களை தனியார் வசம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில்,

“தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் 1500க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இவை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் உள் மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. சுமார் 9000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். தற்போது அவுட்சோர்சிங் முறையில் மொத்தமாக தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர் நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 8 ஆண்டுகளுக்கு மேலாக திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர் நியமனம் செய்யப்படவில்லை. தினமும் 300 பேருந்துகள் வரை ஓட்டுநர், நடத்துநர் இல்லாமல் நிறுத்தப்படுகின்றன.  6 மாதத்திற்கு முன்பு இருந்த காலி பணியிட அடிப்படையில் வேலைவாய்ப்புகளில் தனியார் மூலம் நிரப்புவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். ஜூலை 18-ம் தேதி காலை வரை ஒப்பந்த புள்ளிகளை அளிக்கலாம். அன்றே ஒப்பந்த புள்ளிகளில் இறுதி செய்யப்படும்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

Tags :
#transport workersBus DepotContract BasisNellaiNews7Tamilnews7TamilUpdatesTirunelveliTNSTC
Advertisement
Next Article