Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

8 மாதக் குழந்தையின் நுரையீரலில் #LED லைட்... சாதுர்யமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!

04:03 PM Nov 05, 2024 IST | Web Editor
Advertisement

8 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த, ரிமோட் கார் எல்இடி லைட்டை,
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதுர்யமாக அகற்றி சாதித்துள்ளனர்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 மாத பெண் குழந்தை இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலுடன் அவதிப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் நுரையீரலில் இருந்து அப்பொருளை அகற்றுவதற்கு, பிராங்கோஸ்கோபி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 8 மாதமே ஆன சிறிய குழந்தைக்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது. எனவே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்தப் பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அந்த இரும்பு பொருள் அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் பார்க்கையில் குழந்தையின் இடது பக்க
நுரையீரலில் சிக்கி இருந்தது, குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரில் இருக்கு எல்இடி லைட் என தெரியவந்தது. இச்சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று கடந்த 4ஆம் தேதி நலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.

மேலும் மருத்துவமனை முதல்வர் கூறியதாவது, சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும் போது அவற்றை விழுங்கவோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருள்களை விளையாட அனுமதிக்க கூடாது.

மேலும் குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சிறு பொருட்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால் உடனே மருத்துவமனையை அணுகி மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்” எனக் கூறினார்.

Tags :
BroncoscopyChildLED lightsurgery
Advertisement
Next Article