“கோபாலு... கோபாலு”... மாணவர் விடுதிக்குள் காதலியை சூட்கேஸில் மறைத்து கொண்டு சென்ற காதலன் - சிக்கியது எப்படி?
02:58 PM Apr 12, 2025 IST
|
Web Editor
Advertisement
ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர், தனது காதலியை மாணவர் விடுதிக்குள் சூட்கேஸ்ஸில் மறைத்து அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
மாணவர் சூட்கேஸை தூக்கி செல்ல முடியாமல் சென்றதை பார்த்து சந்தேகமடைந்த விடுதி காவலர்கள், சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் ஒரு பெண் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனை அங்கிருந்த ஒருவர் மறைமுகமாக எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக மாணவரிடம் விசாரித்ததில் அந்த பெண், மாணவரின் காதலி என்றும், அவரை யாருக்கும் தெரியாமல் மாணவர் விடுதிக்குள் அழைத்துச் செல்ல முயன்று சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அந்தப் பெண், அதேக் கல்லூரி மாணவியா, அல்லது வெளி நபரா என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை.
Next Article