Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்வதேச மகளிர் தினம் - சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

08:05 AM Mar 08, 2024 IST | Web Editor
Advertisement

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

Advertisement

இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

இதையும் படியுங்கள் : பெற்றோரே, ஆசிரியர்களே உஷார்! LSD போதை பொருள் என்றால் என்ன? எச்சரிக்கும் அரவிந்தன் IPS!

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில், ஒரு பெண் குழந்தை, ஒரு மகளிர் மற்றும் வயதான ஒரு பெண் மணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த டூடுல் ஒரு பெண் சிறு வயது முதல் வயது முதிர்வு வரை உள்ள காலகட்டதை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

Tags :
#InternationalWomensDayDoodlesgoogleGoogleDoodleInternationalWomensDay2024WomenEmpowermentWomensDayWomensDay2024
Advertisement
Next Article