Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Google நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த #Russia நீதிமன்றம்... காரணம் என்ன?

09:36 AM Nov 02, 2024 IST | Web Editor
Advertisement

ரஷ்ய அரசின் ஆதரவு சேனல்களை யூடியூப் தளத்திருந்து நீக்கியதால், கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் டாலரை அபராதமாக விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் கூகுள். யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்கள் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா அரசின் ஆதரவு சேனல்களை யூடியூப் தளத்திருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது. இதனையடுத்து, பல ரஷ்ய ஊடகங்கள் கூகுள் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த ரஷ்ய நீதிமன்றம், கூகுள் நிறுவனம் ஒளிபரப்புச் சட்டங்களை மீறியதாக கூறி, அந்நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் டாலரை அபராதமாக விதித்தது. மேலும், 9 மாதங்களுக்குள் இந்த சேனல்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கூகுள் இதை செய்யத்தவறினால் அபராதம் இரண்டு மடங்காகும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஒரு டெசில்லியன் டாலர் என்பது 1-க்குப் பிறகு 34 இலக்க பூஜ்ஜியங்களை உள்ளடக்கியது. அப்படிப் பார்த்தால், கூகுள் நிறுவனம் ரஷ்யாவுக்கு செலுத்த வேண்டிய அபராதம் $20,000,000,000,000,000,000,000,000,000,000,000-மாக இருக்கும். இந்த தொகை உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட பல மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

Advertisement
Next Article