ஜெமினியாக மாறும் ‘பார்ட்’ - கூகுள் அதிரடி முடிவு..!
கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களை கூகுள் நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் கூகுளின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டுடன் ‘ஜெமினி’ தொழில்நுட்பத்தை இணைத்துள்ள கூகுள், பார்டையும் 'ஜெமினி' எனப் பெயர் மாற்றம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் ; பெரிய சம்பவம் லோடிங்… அருண்ராஜா காமராஜுடன் இணையும் விஷ்ணு விஷால்..!
இந்த பெயர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஜெமினி செயலி உருவாக்கும் டைலன் ரௌசெல்லிடமிருந்து கிடைத்த தகவல்படி பெயர் மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜெமினியில் குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய அம்சங்களையும், ஜெமினி அட்வான்ஸ்டு அல்ட்ரா 1.0 (Gemini advanced ultra 1.0) என்ற புதிய ஜெமினி வடிவத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.