Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை!

12:02 PM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி  39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதற்கு முன்னதாக பள்ளிகளில் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டு வருகிறது.  ஏனெனில் பள்ளிகளில் தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கல்லூரிகளில் தான் பூட்டி வைக்கப்படும்.

இதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 2 தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதனையடுத்து ஏப்.13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Tags :
#summer holidayDepartment of School EducationHolidaysSchoolTN School
Advertisement
Next Article