Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ் | தக் லைஃப் ஷூட்டிங் எப்போ தெரியுமா?

12:46 PM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி இணையும் புதிய படமான ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisement

‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

AR ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இம்மாதம் 18-ம் தேதி சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கமல் தொடங்க உள்ளாா்.

Advertisement
Next Article