Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#GoldRate | தீபாவளியையொட்டி புதிய உச்சம் தொடும் தங்கம் விலை!

10:26 AM Oct 21, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7,300க்கும், சவரன் ரூ.58,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் தீபாவளி நெருங்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.58,240க்கும், ஒரு கிராம் ரூ.7,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 48,200க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,025க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.109க்கும், ஒரு கிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
GoldGold rateJewelsprice hike
Advertisement
Next Article