#GoldRate | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ரூ.57,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதன்படி, நேற்று (நவ.28) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : “டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!
இந்த நிலையில், இன்று (நவ.29) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ரூ.7,160-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ரூ.57,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த ஒரு வாரமாக மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000 -க்கும் விற்பனையாகிறது.