கோல்டன் குளோப் 2024 | விருதுகளை வாரி குவித்த 'ஓப்பன்ஹைமர்'...!
அணுகுண்டின் தந்தை ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை பற்றிய கிறிஸ்டோபர் நோலனின் மகத்தான படைப்பான 'ஓப்பன்ஹைமர்' 81வது கோல்டன் குளோப்ஸில் பல விருதுகளைப் பெற்றது.
பொழுதுபோக்கு உலகில் ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்கார் விருதுக்கு முன் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகிறது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி உலகில் இரண்டாவது பெரிய விருது இதுவாகும்.
உலகெங்கிலும் உள்ள திரை ர்சிகர்களின் பார்வை தற்போது அதன் மீது உள்ளது. இந்த விழாவில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியானதும் பார்வையாளர்களின் உற்சாகம் உச்சக்கட்டத்தை எட்டியது.தற்போது இறுதியாக கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கோல்டன் குளோப்ஸ் பரிந்துரைகளில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி உலகம் முழுவதிலும் இருந்து 27 விருது பிரிவுகள் அடங்கும். இதில், பாக்ஸ் ஆபிஸ் சாதனை மற்றும் தொலைக்காட்சியில் சிறந்த நகைச்சுவை நடிகர் என இரண்டு புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன.இந்த விருதுகள் 1944 இல் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த விருது, படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
'ஓப்பன்ஹைமர்' படத்திற்காக ராபர்ட் டவுனி சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் விருதை வென்றார். இந்தப் படத்துக்காக கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார். இது அவருக்கு முதல் கோல்டன் குளோப் விருது.இது மட்டுமின்றி, திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான விருதையும் படத்தின் நடிகர் சில்லியன் மர்பி பெற்றார்.சிறந்த ஸ்கோர் மோஷன் பிக்சர் மற்றும் சிறந்த மோஷன் டிராமா பிக்சர் ஆகிய விருதுகளையும் 'ஓப்பன்ஹைமர்' பெற்றது.
இந்தப் படம் அமெரிக்க இயற்பியலாளர் ஜே.வின் வாழ்க்கை வரலாற்று நாடகமாகும். 'அணுகுண்டின் தந்தை' என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹைமரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை இப்படம் வழங்குகிறது.‘டிரினிட்டி’ எனப் பெயரிடப்பட்ட ஓபன்ஹெய்மர் தலைமையில் அமெரிக்க ராணுவம் நடத்திய உலகின் முதல் அணுகுண்டுச் சோதனையின் கதைதான் இந்தப் படம். பகவத் கீதையை அவமதித்ததாக இப்படம் நிறைய சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.