#Tirupati-ல் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருட்டு... தேவஸ்தான ஊழியர் கைது!
திருப்பதியில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
இதையும் படியுங்கள் : “கடந்த 2 நாட்களாக கண்ணில் தண்ணீரோடதான் இருந்தேன்” – இயக்குநர் #SundarC நெகிழ்ச்சி!
இந்த நிலையில், பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள 650 கிராம் தங்கத்தை திருடிய வழக்கில் தேவஸ்தான ஊழியர் பென்சாலய்யா (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டாக சுமார் 10 முதல் 15 முறை இவர் தங்கத்தை திருடியுள்ளார் என்றும், அவரிடம் இருந்து 650 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.