கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான #Gold பறிமுதல்!
12:17 PM Aug 26, 2024 IST
|
Web Editor
Advertisement
சார்ஜாவிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி
வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்
கோவை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள்,
பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தங்கம் பிடிபடாத நிலையில், விமானத்தில் சோதனை மேற்கொண்டனர்.